வெள்ளி, 19 செப்டம்பர், 2014

சத்தியமங்கலம் வாசிக்கிறது-2014



சத்தியமங்கலம் வாசிக்கிறது- 2014

அன்புடையீர்,
                        வணக்கம். லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

 


           கல்வி மேலாண்மைக்குழு தலைவர்,அரிமா K.லோகநாதன் அவர்கள் துவக்கவுரை & வரவேற்புரை நிகழ்த்திய காட்சி.....

திரு.K.ஜோசப் சகாயராஜ் அவர்கள்,தலைமையாசிரியர், நகராட்சி உயர்நிலை பள்ளி,ரங்கசமுத்திரம்(சத்தியமங்கலம்) . தலைமையுரை.....



திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு , வாழ்த்துரை நிகழ்த்திய காட்சி.......,



 திரு.S.ஜெயகாந்தன் M.C.A.,அவர்கள்,செயலாளர்,விடியல் சமூக சேவை இயக்கம்-புளியம்பட்டி அவர்கள் புத்தக வாசிப்போம் பற்றிய விளக்கவுரை நிகழ்த்திய காட்சி......

 ''சத்தியமங்கலம் வாசிக்கிறது'' நிகழ்ச்சியில் பங்கேற்ற சான்றோர் பெருமக்களில் சிலர்........


 சத்தியமங்கலம் வாசிக்கிறது - 
           1000 மாணவ மாணவியர்கள் புத்தகங்களை வாசித்தனர்
சத்தியமங்கலம் 18 செப்டெம்பர் 2014 புதன்கிழமை
விடியல் சமூகநல இயக்கம் மற்றும் சத்தியமங்கலம் கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை சார்பில் சத்தியமங்கலத்தில் முதல்முறையாக புத்தக திருவிழா அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 5 நாட்கள் கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
சத்தியமங்கலத்தில் முதல்முறையாக நடைபெற உள்ள புத்தக திருவிழா குறித்தும், புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் ரங்கசமுத்திரம் நகராட்சி உயர்நிலை-துவக்க பள்ளியில் சத்தியமங்கலம் வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.ஜோசப் சகாயராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் எம்.செல்வி, கல்வி மேலாண்மை குழு தலைவர் K.லோகநாதன், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்க தலைவர்A.A. ராமசாமி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்க செயலாளர் C.பரமேஸ்வரன், விடியல் உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




                                  விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் பேசும்போது ஒவ்வொரு புத்தகமும் ஒரு நல்ல துணைவன். மனித மனதின் கோணலை நேர்படுத்துவது புத்தகங்கள் தான். ஒரே வாழ்கையில் நூறு வாழ்கை வாழ்ந்த அனுபவத்தை புத்தகம் தரும். ஒரு புத்தகம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும். ஒவ்வொரு பிறவியிலும் ஒரு மனிதனோடு வாழ்ந்த அனுபவத்தை புத்தகம் தரும். நாம் தனிமையில் இருந்தாலும் புத்தகங்களோடு இருந்தால் தனிமையை தவுடு பொடியாக்கும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு. புத்தகங்களை தொடும் போது நாம் அனுபவத்தை தொடுகிறோம். உட்கார்ந்த இடத்தில் இருந்தே புத்தகத்தின் மூலம் நாம் உலகத்தை அறிந்து கொள்ளலாம்.மாணவ மாணவியர்கள் பாட புத்தகங்களை படிப்பதோடு பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும். ஏனெனில் புத்தகங்கள் மகத்தான மனிதர்களையும், அறிஞர்களையும், கவிஞர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கி உள்ளது. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள புத்தக திருவிழாவில் 25 இகும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தின் பிரபலமான பதிப்பகங்கள் பங்குபெற உள்ளனர். இலட்சகணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.10% சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்கள் வழங்கபடும். இந்த அரிய வாய்ப்பினை மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் நகராட்சி உயர்நிலை மற்றும் துவக்க பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஒரு மணிநேரம் புத்தகங்களை வாசித்தனர். இந்நிகழ்ச்சியில்கல்வி மேலாண்மைக் குழு தலைவர், நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் நகராட்சி துவக்க பள்ளி தலைமையாசிரியை ,இரு பள்ளி ஆசிரிய,ஆசிரியை பெருமக்கள்,மாணவ,மாணவிகள்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,விடியல் சமூக சேவை இயக்கம்-புளியம்பட்டி உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
                              தொடர்புக்கு,
                    அரிமா K.லோகநாதன், 
 லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் & 
வாகன புகை மாசு பரிசோதனை மையம்-
                  சத்தியமங்கலம்.
           +91 9443021196

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக