திங்கள், 8 செப்டம்பர், 2014

பசுமைக்குடில்கள் என்றால் என்ன?

                                                  

அன்புடையீர்,
                வணக்கம். 
              லோகு வாகன புகை மாசு பரிசோதனை மையம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                         பசுமைக்குடில்கள் எனப்படுபவை தாவரங்கள் பயிரிடப்பட்டு, வெளிச் சூழலினால் பாதிக்கப்படாமல், பாதுகாப்பாக வளர்வதற்காக வெப்பநிலை மற்றும் ஈரப்பதனை ஒரு கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பதற்காக, கண்ணாடி அல்லது நெகிழியைக் கொண்டு அமைக்கப்படும் கட்டடங்கள் ஆகும். இவை குளிர் பிரதேசங்களில் தாவர வளர்ப்புக்கு இயலாத சூழலிலும் விவசாயம் செய்யப் பயன்படும் ஒரு கொட்டகை போன்ற அமைப்பாகும். இதன் கூரையானது கண்ணாடி போன்ற சூரிய ஒளி ஊடுருவக்கூடிய பொருளால் செய்ததாகும். ஒரு கண்ணாடி அறைக்குள் வளர்க்கப் படும் பச்சைத் தாவரங்கள், கரியமில வாயு மற்றும் மேற்சொன்ன வாயுக்களுடன் வினை பட்டுச் சூரியக் கதிர்களை அதிக அளவில் உறிஞ்சுவதால் அறையின் உட்புறம் வெளிப்புறத்தைக் காட்டிலும் அதிக வெப்பமடைகிறது. மேலும் இக்கூரையானது அதன் வழி புகும் சூரிய ஒளிக்கற்றையையும் அதனால் ஏற்படும் வெப்பத்தையும் வெளியேறாமல் தடுக்கும் அமைப்பினது. இதனால் வெளியில் வெகுவாகக் குளிராக இருந்தாலும், குடிலினுள் விவசாயத்திற்கு ஏற்ற ஒளிநிலையையும் வெப்பநிலையையும் பராமரிக்கலாம்.
குளிர் பிரதேசங்களில் பகலில் ஏற்படும் வெப்பம், இரவில் இல்லாமல் போய்விடுவதால்  தாவர வளர்ப்புக்கேற்ற பருவநிலை மாறுதல் அடைந்து  செடிகள் வளர்க்க இயலாமல் போகும். இதைத் தடுக்கவே இந்தக் கண்ணாடிக் குடில். அறைக்குள் பகலில் கண்ணாடி வழியே வரும் வெப்பம், இரவில் மிதமான வெப்பநிலை நிலவ, உள்ளே இருக்கும் வெப்பம் வெளியேறாமல் கண்ணாடிகள் தடுத்துக் காக்கின்றன. இதனால் அந்தச் செடிகள் தொடர்ந்து வளர முடியும். இதனைத் தான் பசுமைக் குடில் விளைவு என்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக