வியாழன், 4 செப்டம்பர், 2014

லோகு வாகன புகை மாசு சோதனை மையம் -சத்தியமங்கலம்.

             லோகு வாகன புகை மாசு சோதனை மையம்-சத்தியமங்கலம்.
                      (LOGU  SMOKE EMISSION TEST CENTER - SATHYAMANGALAM)

மரியாதைக்குரியவர்களே, 
                    அனைவருக்கும் இனிய வணக்கம்.
                     

                
                லோகு வாகன புகை மாசு சோதனை மையம்-சத்தியமங்கலம்.
                  (LOGU  SMOKE EMISSION TEST CENTER - SATHYAMANGALAM) வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
             இன்றைய சமூகப் பிரச்சினையில் மிக முக்கிய பிரச்சினையாக  சுற்றுச்சூழல் மாசு பங்கு வகிக்கிறது.
            சுற்றுச்சூழல் மாசு என்பது நம்மை சுற்றி உள்ள காற்று,தண்ணீர்,மற்றும் பூமி மாசடைவதை சுற்றுச்சூழல் மாசு என்கிறோம்.
              சுற்றுச்சூழல் மாசடைவதால் புதுப் புது வியாதிகளும்,புவி வெப்பமடைவதலும்,இயற்கை மாறுபாடு அடைவதும்,பருவநிலை மாறுபாடு அடைவதும்,சுனாமி,வறட்சி,உணவு உற்பத்தி பாதிப்பு,உடலுறுப்புகள் பாதிப்பு என பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறோம்.
             சுற்றுச்சூழல் மாசடைய காரணங்கள் என்று பார்த்தோமானால், தொழிற்சாலைகள்,நெகிழி அதாவது பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பயன்பாடு,மின்னணு கழிவுகள்,இரசாயன பொருட்கள்,இயற்கை வளங்களை அழித்தல், டீசல்,பெட்ரோல்,சமையல் எரிவாயு போன்ற புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி அழித்தல், வனவளங்களை அழித்தல்,இயற்கைக்கு மாறாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின் மோட்டார் பயன்படுத்தி தண்ணீரை மிக விரைவாக வெளியேற்றுதல்,போன்ற பல காரணிகள் இருந்தாலும் மோட்டார் வாகனங்கள் வெளியிடும் புகை மாசு நம்ம பூமி வளத்திற்கு பெரும் அழிவை கொடுக்கும்விதமாக பல்வேறு கெடுதல்களை கொடுத்து வருகிறது.
             நமது அன்றாட அத்தியாவசியத்தேவைகளை நிறைவேற்ற சாலைப்பயணம் தவிர்க்கமுடியாத காரணமாக அமைந்துவிட்டது.
 இன்றைய அவசர உலகத்தில் நமது தேவையை நிறைவேற்ற ஆளுக்கொரு வாகனம் என்ற நிலையை கையாளும் நாம் வாகனம் வெளிவிடும் புகை அளவை பரிசோதினை செய்து புகை அளவை கட்டுப்படுத்தி காற்று மாசடைவதை கட்டுப்படுத்த வேண்டும்.

  

      இயன்றவரை மிதிவண்டி பயன்படுத்த வேண்டும்.
             பக்கமாக செல்லவேண்டிய நிலை இருந்தால் நடந்தே செல்ல பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.புதுப்பிக்கும் ஆற்றல்வளங்களான சூரியாற்றல் போன்ற ஆற்றல்வளங்களை பயன்படுத்த வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக